மனிதன் இந்த உலகில் பிறந்ததே ஒரு இனிமையான, இயற்கையுடன் இணைந்த வாழ்கை வாழத்தான். இயற்கை பேராற்றலுடன் இணைந்த இனிமையான பயணமாக இன்று வாழ்கை பலபேருக்கு இல்லாமல் போனது தான் துயரம். சூழியல் மாற்றம், மனிதனின் தவறுகள், பொருளாதார நிர்பந்தம், நோய், உணவு, சித்தாந்த குளறுபடிகள் போன்ற பலபல காரணங்களால் இன்றைய மனித சமுகத்திற்கு “வாழ்கை” என்பது ஒரு இனிமை குறைந்த அனுபவமாக உள்ளது. தொலைத்த இடத்தில் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை. “வாழ்கை” ஒரு இனிமையான அனுபவமாக மாறுவதற்கு நாம் மீட்டெடுக்க வேண்டிய மரபு சார்த்த செய்திகளை தெரிந்து கொண்டு செயல் படத்துவங்குவது முதல் படி.
செம்மை நலக் கூடல், மருத்துவமனைக்குப் போகாமல் வாழ விரும்பும் மனிதர்களை அரவணைக்கும் நிகழ்வு. இது வெறும் மருத்துவம், நோய் சம்பந்தப்பட்டது இல்லை. வாழ்வியல் தத்துவம் சம்பந்தமானது. முடிந்தால் வாருங்கள் நண்பர்களே
செம்மை நலக் கூடலில் பங்கேற்கிறார்!
திருமதி. வெற்றி முத்துகுமார். சென்னையில் அச்சகத் தொழில் அதிபரான திரு.முத்துகுமாரின் மனைவி. கடந்த 2007 ஆம் ஆண்டு இவருக்கு சர்க்கரை இருப்பதாக அலோபதி ,மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். சர்க்கரை நோயின் எல்லா அறிகுறிகளும் பெரும் தொல்லைகளும் திருமதி.வெற்றிக்கு இருந்தன. ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் இன்சுலின் குத்த வேண்டிய நிலையில் அவர் இருந்தார். மரபுவழி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கடைபிடிக்கத் துவங்கினார். வெகு விரைவில், அவருக்கு சர்க்கரை நோயின் தொல்லைகள் நீங்கின. முழு நலமும் அடைந்தார்.
திருமதி.வெற்றி சென்னை நலக் கூடலில் பங்கேற்று, தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். type 1 வகை சர்க்கரை நோயைத் தீர்க்கவே முடியாது எனும் கட்டுக்கதையை உடைக்கும் சாட்சியங்கள் ஏராளமாக உள்ளனர். திருமதி.வெற்றி அவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த சாட்சியங்களில் ஒருவர்.
மேலும் மரபு வழி மருத்துவம் மற்றும் வாழ்வியல் மாற்றத்தின் மூலம் குணமடைந்த பல நண்பர்களை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் சந்தேகங்கள் பலவற்றுக்கு விடை காண சரியான களம்.
நம்புங்கள்….வாருங்கள்…. உணருங்கள்….
யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறு ஒன்றும் அறியேன் பராபரமே !!!!!
விருப்பம் உள்ளோர் கலந்துகொள்ளுங்கள்.உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் இந்த நிகழ்வு பற்றிய செய்தியைப் பகிரவும்….நன்றி