சாத்திரம் செய்தோம் விஞ்ஞானம் வளர்த்தோம் மெய்ஞானம் கண்டோம் அஞ்ஞானம் தவிர்த்தோம்
கடல் கொண்டோம் உழவு செழித்தோம் வானம் கணித்தோம் அறிவு பரப்பினோம்
சமூகம் கண்டோம் அரசுமுறை செய்தோம் உணவு வகைசெய்தோம் நீதி நிலைபெற்றோம்
அறிவின் விரிவு அதி விரைவில் அறியாமை ஆகிப் போன மாயமென்ன…
அறிவியலின் பெயரால் அறிவுப்பூர்வமான கேள்வி… பரிசு பெற்றவன் பகடி செய்கிறான்…
மாற்றம் ஆதரிக்கும் உங்கள் கொள்கை…. உங்கள் “முடிவு”ம் மாறும் என்பதறிந்துதான்…
எங்கள் “அறிவு”க்கு உங்கள் அறிவுக்கான ஆதாரம் இல்லாமல் போகலாம் இக்காலத்தில்…
எங்கள் அறிவின் பலம் “உணர்த்தல்” உங்கள் நிலையின் பலம் “பார்த்தல்”
பல்லிக்கும் கரப்பாணுக்கும் பார்வை நம்மில் வலிதாம்… உங்கள் “அறிவியல்” சொன்ன “உண்மை”
உணரும் “உயிர்” பிரபஞ்ச சக்தியிடம் கேட்டது …. மனிதன் எல்லாவற்றையும் கண்கொண்டு மட்டுமே ஏன் காண விழைகிறான்… “உணர்தல்” அரிதென்பதாலா…
சக்தி சிரித்தது… “உயிர்” மட்டும் பதில் உணர்ந்தது…
Superb! Keep writing!
Arumai nanba
Your email address will not be published. Required fields are marked *
Message
Name *
Email *
Relationship
Save my name, email, and website in this browser for the next time I comment.
Attachment The maximum upload file size: 32 MB.You can upload: image, audio, video, .
2 Comments
Superb! Keep writing!
Arumai nanba